மாநில செய்திகள்
இரக்கம் மற்றும் சகோதரத்துவத்தை வலுப்படுத்துவோம் - கவர்னர் ஆர்.என்.ரவி பக்ரீத் வாழ்த்து
மாநில செய்திகள்

'இரக்கம் மற்றும் சகோதரத்துவத்தை வலுப்படுத்துவோம்' - கவர்னர் ஆர்.என்.ரவி பக்ரீத் வாழ்த்து

தினத்தந்தி
|
29 Jun 2023 1:41 AM IST

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தனது பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சென்னை,

தியாக திருநாள் என்று போற்றப்படும் 'பக்ரீத்' பண்டிகை நாடு முழுவதும் இஸ்லாமியர்களால் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "தமிழக மக்களுக்கு, குறிப்பாக நமது இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு பக்ரீத் நல்வாழ்த்துக்கள். பரிவு, சகோதரத்துவம் மற்றும் இரக்கத்தின் உண்மையான உணர்வை வலுப்படுத்துவதன் மூலம், ஒரு குடும்பமாக, அமைதியான, ஆத்மநிர்பர் பாரத் மற்றும் இணக்கமான இந்தியாவை உருவாக்குவோம்" என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.


"Heartiest wishes to the people of Tamil Nadu, especially our Muslim brothers and sisters, on the #EidUlAdha. Let us, as a family, build a peaceful, #AtmanirbharBharat and harmonious India by strengthening the true spirit of empathy, brotherhood and compassion."- Governor Ravi pic.twitter.com/QwOJivUfrI

— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) June 28, 2023 ">Also Read:

மேலும் செய்திகள்